News Just In

12/30/2021 12:03:00 PM

சாதனையாளர்களை கௌரவிக்கும் ஸாஹிரா விருதுகள் 2021 இன்று வழங்கி வைப்பு !!



நூருள் ஹுதா உமர்
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கல்விபயின்று கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் சாதாரண தரத்தில் திறமை சித்தியெய்திய மாணவர்கள் மற்றும் கடந்த வருடங்களில் உயர்தரத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் தேசிய ரீதியாக சாதித்த மாணவர்கள் எனப்பலரும் பாராட்டி கௌரவிக்கப்படும் "ஸாஹிரா விருதுகள்- 2021 வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.ஐ.எம். ஜாபிரின் தலைமையில் இன்று (30) சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

230 சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி என்.எம். அப்துல் மலிக், கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமா சபை தலைவர் எம்.எம்.சலீம், பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் டாக்டர் சனூஸ் காரியப்பர், அந்நூர் செரிட்டி நிறுவன பிரதிநிதி, பாடசாலை பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், ஸாஹிரா தேசிய கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், சாதனை படைத்த மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்விமான்கள், புத்திஜீவிகள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



No comments: