News Just In

11/19/2021 04:56:00 PM

முகக்கவச பயன்பாடு குறித்து வௌியான ஆய்வு முடிவு!

முகக்கவச பயன்பாடு கொவிட் அபாயத்தை பாதியாகக் குறைக்கும் என பிரித்தானியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி வேலைத்திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் கூட மீண்டும் கொவிட் தொற்று தலை தூக்கியுள்ளமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரித்தானிய வைத்திய இதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அநேகமான நாடுகள் தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கை காரணமாக சமூக கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளமை அபாயகரமானது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, வரலாறு காணாத வகையில் பிரித்தானியாவின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கொவிட் பெருந்தொற்று காரணமாக இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments: