News Just In

8/21/2021 06:11:00 PM

ஊரடங்கு காலப்பகுதிக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகியது...!!


நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், பொது சேவைகள் இடம்பெறும் முறைமை மற்றும் பொதுமக்கள் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பான புதிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, வீட்டிலிருந்து ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் மாத்திரம் வெளியே செல்ல அனுமதி ன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் வரையறுக்கப்பட்ட நிதி நடவடிக்கைகளையும், பல்பொருள் அங்காடிகள், அத்தியாவசிய சேவைகள் என்பனவற்றை இணையம் மூலம் முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெதுப்பக உற்பத்திகள், கடலுணவு விநியோகம் என்பனவற்றை நடமாடும் சேவையில் முன்னெடுக்க முடியும்.

இதேநேரம், கொவிட் அல்லாத மரணங்களின் இறுதிக் கிரியைகள், 24 மணிநேரத்திற்குள் இடம்பெற வேண்டும் என்றும் புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன பழுதுபார்ப்பு நிலையங்கள், ரயர் சேவைகள் என்பனவற்றை அத்தியாவசியமான ஊழியர்களுடன் முன்னெடுக்க முடியும்.

No comments: