மட்டக்களப்பு நகர் பகுதியொன்றில் இன்றைய தினம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின்போது அதிக குப்பைகள் நிறைந்த இடத்தில் வைத்து ஏற்றப்பட்டுள்ளது.
நாட்டில் தற்ப்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சுகாதார நடைமுறைகளை மக்கள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுருத்தும் சுகாதார துறை இது தொடர்பாக அசமந்த போக்காக இருந்தது ஏன் என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் நிலையை உணர்ந்து இனிவரும் காலங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை மக்களுக்கு தீங்கு வராதவாறு சுகாதார பரிசோதகர்கள் முன்னேடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி ஏற்றும் இடத்தில் இவ்வாறு அசுத்தமாக காணப்படும் போது அந்த இடத்தில் இருந்து மக்களுக்கு நோய் தொற்ற அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
எனவே மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட கொவிட் செயலணி பிராந்திய சுகாதார பணிப்பாளர் இது தொடர்பாக கூடிய கவனம் எடுக்க வேண்டும். என மக்கள் தெரிவித்துள்ளனர்.








No comments: