News Just In

1/03/2021 11:39:00 AM

படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் சோளப் பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை!!


இலங்கையில் படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் சோளப் பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்த முறை பெரும் போகத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் ஐந்து வீதம் படைப்புழுத் தாக்கத்தினால் சேதமடைந்துள்ளது.

எனவே இதனை கருத்திற்கொண்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

No comments: