News Just In

10/03/2020 07:42:00 PM

திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நபரொருவர் விழுந்து உயிரிழப்பு!!


திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய வளாகத்திலிருந்து நபரொருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(3) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நிலையில் கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கற்பாறையிலிருந்து விழுந்து சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரித்தனர்.

இந்த நிலையில் அவரது சடலம் தற்பொழுது மீட்கப்பட்டு திருகோணமலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஏ.செந்தூரன் (38 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் சடலத்தை திருகோணமலை நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தலைமை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.




No comments: