News Just In

10/07/2020 10:17:00 AM

மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு!!

உடனடியாக அமுலாகும் வகையில் கம்பஹா மாவட்டத்தின் 17 காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வீரகுல, வெலிவேரிய, பல்லேவெல, யக்கல ஆகிய காவற்துறை அதிகாரங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜா-எல மற்றும் கந்தான காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, திவுலபிட்டி, மினுவாங்கொடை மற்றும் வெயங்கொடை ஆகிய காவற்துறை அதிகாரங்களுக்குட்பட்ட பிரதேசங்களும் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments: