News Just In

10/06/2020 03:25:00 PM

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடபட்டுள்ளது!!


கிழக்குப் பல்கலைக்கழக 2018/2019 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட 2018/2019 கல்வியாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2020.10.12ம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக 2018/2019 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி கலாநிதி ஜெ.கென்னடி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேற்படி மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பது தொடர்பான மீள் அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி கலாநிதி ஜெ.கென்னடி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: