13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த வருடம் ஐ.பி.எல். கிண்ணத்தை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சியம் வெல்லும் என்று நம்புகிறேன் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் கூறுகையில், இந்த ஐ.பி.எல். கிண்ணத்தை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சியம் வெல்லும் என்று நம்புகிறேன். போட்டி எங்கு நடந்தாலும் எப்போதும் எனது ஆதரவு மும்பை அணிக்கு உண்டு. மும்பை மற்றும் இந்தியன்ஸ் ஒன்றிணையும் போது அது மும்பை இந்தியன்ஸ் ஆகிறது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற 2013, 2015, 2017 மற்றும் 2019 சந்தர்ப்பங்களின்போது தனது முதல் போட்டியை தோல்வியுடனேயே ஆரம்பித்துள்ளதாகவும் மும்பை இந்தியன்ஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: