மாடு குறுக்காக பாய்ந்த காரணத்தினால் கூலா் வாகனமொன்று விபத்துக்குள்ளானது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீன்கள் கொண்டு சென்ற கூலா் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தானது A-9 வீதியின் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக குறித்த வீதியெங்கும் சுமாா் 10 ஆயிரம் கிலோ மீன்கள் வீதி எங்கும் பரவிக் காணப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.
No comments: