News Just In

11/02/2019 04:08:00 PM

ஜனாதிபதி சட்டத்தரணி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொழிலில் விசேட தர நிலைக்கு உயர்ந்துள்ள சட்டத்தரணிகள் இதற்காக விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதாக ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு அமைவாக தகுதிகளை பூர்த்தி செய்யும் சட்டத்தரணிகள் தமது விண்ணப்பங்களை பதிவுத்தபாலில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு அமைவாக எதிர்வரும் 7 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக ஜனாதிபதி செயலாளர் / ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01,என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பன வர்த்தமானி அறிவிப்பு விபரங்கள் பின்வருமாறு:

No comments: