News Just In

11/04/2019 12:07:00 PM

யாழ் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மருத்துவ பீட மாணவர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலையில் குறித்த மாணவரின் சடலம் அவர் தங்கியுள்ள மாணவர்கள் விடுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பள்ளிமுனை பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய கியுமன் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

எனினும் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: