தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினால் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் டெங்கு நோய் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு டெங்கு ஒழிப்பு செயலணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான பேச்சுவார்த்தை மத்திய மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
No comments: