News Just In

11/07/2026 03:38:00 PM

அமெரிக்க கடற்படையின் MV-22B விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை!

அமெரிக்க கடற்படையின் MV-22B விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை!



போயிங் (Boeing) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட MV-22B ரக அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமானம் இன்று (07) நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த விமானம், இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தெற்கே சுமார் 50 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பலில் இருந்து புறப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அதேவேளை, குறித்த விமானம் இன்று பிற்பகல் மீண்டும் அமெரிக்க கடற்படைக் கப்பலுக்குத் திரும்பிச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டராகவும் விமானமாகவும் இருவிதங்களில் செயல்படக்கூடியமை இந்த விமானத்தின் சிறப்பம்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள சுழலும் இறக்கிகள் (Rotors), ஹெலிகொப்டரைப் போன்று மேல்நோக்கி அமைந்திருக்கும். தேவைக்கேற்ப அவற்றை முன்னோக்கித் திருப்பி, சாதாரண விமானத்தைப் போன்று பறக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விமானம் தரையிலிருந்து மேலெழும்புவதற்கு ஓடுபாதை அவசியமில்லை. ஹெலிகொப்டரைப் போன்று ஒரே இடத்திலிருந்து நேரடியாக மேலெழும்பும் திறனைக் கொண்டுள்ளது.

No comments: