அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச மீனவர்கள் ஓய்வெடுத்தல், வலைகளைத் திருத்துதல் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடமின்றி நீண்டகாலமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்த நிலையில், அவர்களுக்கான பல்தேவை கட்டிடமொன்றை காரைதீவு பிரதேசத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ அமைப்புகள் தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக காரைதீவு பிரதேச சபையிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்ததாக குறிப்பிட்டார்.
மீனவர்களின் கோரிக்கையின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்று, பல்தேவை கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.
இதன் பயனாக, காரைதீவு பிரதேசத்தில் மீனவர்களுக்கான பல்தேவை கட்டிடமொன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண கட்டிடங்கள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது எமது பொறுப்பாகும். அவர்களின் ஓய்வு, வலை திருத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும், நலன்புரி நடவடிக்கைகளுக்கும் ஒரு நிரந்தர இடம் அவசியமாக இருந்தது. இதற்காக மீனவ அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்துள்ளோம்” என சுப்ரமணியம் பாஸ்கரன் தெரிவித்தார்.
மேலும், இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாண கட்டிடங்கள் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் எதிர்காலத்திலும் பிரதேச சபை உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் மேலும் தெரிவித்தார்.

No comments: