News Just In

4/28/2026 11:11:00 AM

மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு: இரு அதிகாரிகள் கைது - சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு: இரு அதிகாரிகள் கைது
- சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்



கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, ஒரு ஜெயிலர் மற்றும் ஒரு பெண் சிறைக்காவலர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 வயதுடைய கைதி ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று காலை இரண்டு கைதிகள் சிறை அறைகளை விட்டு வெளியேறி தப்பியோட முயன்றபோது, அதனைத் தடுக்க முயன்ற சிறைக் காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு கைதிகளும் ஒரு சிறை அதிகாரியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பொரளை பொலிஸார் இது குறித்த விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments: