News Just In

3/04/2026 05:03:00 PM

சற்று முன்னர் வெளியான தகவல்! இலங்கை கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல் - தகவல்கள் பிழையென கடற்படை தெரிவிப்பு

சற்று முன்னர் வெளியான தகவல்! இலங்கை கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல் - தகவல்கள் பிழையென கடற்படை தெரிவிப்பு


இலங்கை கடற்பரப்பில், ஈரான் கப்பல் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் குறித்த முந்தைய அறிக்கையில் சில திருத்தங்கள் இருப்பதாக இலங்கை கடற்படை சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை கூறியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முன்னர் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் சரியானவை அல்ல என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் தற்போது தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பவத்தில் காயமடைந்த 32 பேர் கடற்படையால் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

தகவல் அறிந்து குறித்த பகுதிக்கு நாங்கள் சென்றிருந்த போது, கப்பல் மூழ்கியிருந்ததாகவும் அதன்போது நீரிற்குள் தேடலில் ஈடுபட தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போதே நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மக்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக என குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், குறித்த பகுதியில் இருந்து 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சில சடலங்களும் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், மீட்கப்பட்ட சடலங்கள், ஈரானிய போர்க்கப்பலில் பயணித்தவர்களாக இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



மேலும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: