News Just In

2/05/2026 06:39:00 AM

ஜனாதிபதி அநுரவின் பேச்சில் ஏற்பட்ட மாற்றம்!

ஜனாதிபதி அநுரவின் பேச்சில் ஏற்பட்ட  மாற்றம்




கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் நேறையதினம்(04.02.2026) இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய அநுர பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

குறிப்பாக இனவாதம் மற்றும் மதவாதத்தினால் எம்வசமுள்ள பலங்களை நாம் சுயமாக அழிப்பதும் பலவீனப்படுத்துவதும் தான் நடக்கிறது. அதனால் எமது நாட்டில் எந்த வித பிரிவினைக்கும், இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கடந்த 78 ஆண்டுகளில் நல்ல விடயங்களும் நடந்தன, தீய விடயங்களும் நடந்தன என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.

குறிப்பாக, கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்த '75 ஆண்டு கால சாபம்' என்ற கருத்தை ஜனாதிபதி நேற்று மக்கள் மத்தியில் ஆற்றிய உரையில் நிராகரித்துள்ளார்.

இவ்வாறு அநுர ஆற்றிய உரை தற்போது பேசுபொருளாக மாறியிருக்கின்றது

No comments: