News Just In

1/29/2026 06:14:00 AM

சீன நிறுவனங்களின் நுழைவு ; எரிபொருள் வாகனங்களின் விற்பனையை விஞ்சிய மின்சார வாகனங்கள்

சீன நிறுவனங்களின்  நுழைவு ; எரிபொருள் வாகனங்களின் விற்பனையை விஞ்சிய மின்சார வாகனங்கள்



ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வாகனச் சந்தையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், வரலாற்றிலேயே முதல்முறையாக மின்சார வாகனங்களின் விற்பனை, எரிபொருள் வாகனங்களின் விற்பனையை விஞ்சியுள்ளது.

ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தரவுகளின்படி, வாகனப் பதிவுகள் அதிகரித்துள்ளன.

மின்சார வாகனங்கள்: 17.4% பிளக்-இன் ஹைப்ரிட் (Plug-in Hybrid): 9.4% ஹைப்ரிட் வாகனங்கள் (Hybrid): 34.5% இதன்படி, ஒட்டுமொத்தமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களின் பதிவு 61% ஆக உயர்ந்துள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்குப் பெருமளவிலான வரிச் சலுகைகளையும் மற்றும் ஊக்கத்தொகைகளையும் வழங்குவதே இந்த அதிரடி மாற்றத்திற்குக் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அதே சமயம், எரிபொருள் வாகனங்களின் பதிவு 22.5% ஆகக் குறைந்துள்ளது.

இந்தச் சந்தைப் போட்டியில் டெஸ்லா போன்ற நிறுவனங்களுக்குப் சவாலாக, BYDபோன்ற சீன நிறுவனங்கள் ஐரோப்பிய சந்தையில் 200% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

No comments: