News Just In

1/28/2026 06:55:00 PM

சர்ச்சைக்குரிய காணொளி : மாணவனின் மேலதிக கல்விக்கு ஏற்பட்ட பாதிப்பு!

சர்ச்சைக்குரிய காணொளி : மாணவனின் மேலதிக கல்விக்கு ஏற்பட்ட பாதிப்பு



கொழும்பு பிரபல பாடசாலையின் ஆசிரியர் மற்றும் மாணவர் தொடர்பில் வெளியான மோசமான காணொளியால் குறித்த மாணவன் மேற்படிப்புக்காக பதிவு செய்திருந்த பிரபல தனியார் கல்வி நிறுவனம் அவரை விலக்கியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.

கொழும்பின் பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் மற்றும் ஆசிரியர்களின் மோசமான செயற்பாடுகள் தொடர்பான காணொளி மிகப் பழமையானது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் இருவர் பாடசாலையில் இருந்து மாற்றலாகி சென்றுள்ளனர். அதில் ஒருவர் இடமாற்றம் பெற்று சென்று ஆறு மாதங்கள் கடந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஒரு ஆசிரியர் தனியார் கல்வி நிறுவனத்தில் இருந்து பயிற்சிக்காக வந்தவர் எனவும், மற்றையவர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனின் தாய் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவன் 2024 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதியுள்ளார். பரீட்சைக்கு ஒரு வருடத்திற்கு முன்னரே மாணவத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த காணொளி கடந்த 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த விவகாரம் தொடர்பில் பாடசாலை மட்டத்தில் விசாரணைகளும் நடத்தப்பட்டுள்ளன

No comments: