News Just In

10/22/2025 04:01:00 PM

அனர்த்தங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்தல் தொடர்பான கலந்துரையாடல்


அனர்த்தங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்தல் தொடர்பான கலந்துரையாடல்


நூருல் ஹுதா உமர்
வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை மற்றும் அனர்த்தங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்தல் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்ட மிடல், பணிப்பாளர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் பிரதிப் பணிப்பாளர், காரைதீவு பிரதேச சபை தவிசாளர், மற்றும் தொடர்புபட்ட ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் /பிரதிநிதிகள் மற்றும் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.

எதிர்கொள்ளவுள்ள வெள்ள அனர்த்தத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை எவ்வாறு குறைத்தல் மற்றும் ஒவ்வொரு திணைக்களங்களினதும் பொறுப்புகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

No comments: