News Just In

7/03/2025 03:43:00 PM

களுத்துறை வைத்தியசாலையில் இதய குழாய் அறுவை சிகிச்சை இயந்திரம் செயலிழப்பு : நோயாளர்கள் அவதி !


களுத்துறை வைத்தியசாலையில் இதய குழாய் அறுவை சிகிச்சை இயந்திரம் செயலிழப்பு : நோயாளர்கள் அவதி !



களுத்துறை போதனா வைத்தியசாலையில் உள்ள இதய குழாய் அறுவை சிகிச்சை இயந்திரம் பழுதடைந்துள்ளதால் நோயாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

குறித்த அறுவை சிகிச்சை இயந்திரம் கடந்த மே மாதம் 20 ஆம் திகதியிலிருந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம,

இருதய அறுவை சிகிச்சை இயந்திரம் பழுதடைந்ததன் காரணமாக பல அறுவை சிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளதுடன் அதிகளவான நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இயந்திரம் இதய பிரச்சினைகள் தொடர்பில் பரிசோதிக்கவும் அதற்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படும் கருவியாகும்.

எமது நாட்டில் மொத்தம் 14 இதய குழாய் அறுவை சிகிச்சை இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் கண்டி தேசிய வைத்தியசாலையில் இருந்த ஒரு இயந்திரம் முதலில் பழுதடைந்தது.

இந்நிலையில், இரண்டாவதாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் உள்ள இயந்திரம் செயலிழந்துள்ளது. தற்போது 12 இயந்திரங்கள் மாத்திரமே நாட்டில் உள்ளன.

இதய குழாய் அறுவை சிகிச்சை இயந்திரமானது களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பல நோயாளர்கள் பயனடைந்தார்கள்.

இந்த இதய குழாய் அறுவை சிகிச்சை இயந்திரத்தின் உத்தரவாத காலம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் இதனை புதுப்பிக்க சுகாதார அமைச்சு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது இந்த இயந்திரம் முற்றிலும் செயலிழந்துள்ளது. இதனால் பல நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅரசகதிரியக்கதொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது என்றார்.



No comments: