News Just In

7/03/2025 12:51:00 PM

புலிகளை அழித்ததாக கூறும் இராணுவத்தால் ஏன் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லை! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி


புலிகளை அழித்ததாக கூறும் இராணுவத்தால் ஏன் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லை! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி



புலிகளை அழித்ததாக கூறும் இலங்கை இராணுவம் மற்றும் பொலிசாரால் ஏன் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லை என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமகிழ்தன் கேள்விஎழுப்பினார்.

கரைச்சி - கண்டாவளை பிரதேச செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தவிசாளர், உபதவிசாளர், அதிகாரிகள் பொலிசார் இராணுவத்தினர் மற்றும் பல அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில், வனஜீவராசிகளால் திணைக்களத்தின் எல்லைக்குள் உள்ளடக்கப்பட்ட 200 ஏக்கர் வயற்காணிகளை விடுவித்தல் மற்றும் மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் வழங்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஒருங்கிணைப்பு குழு தலைவர், வனஜீவராசிகள் திணைக்களத்தினரை இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது சரியான பதில் வழங்க உயர் அதிகாரிகள் வருகையின்மை காரணத்தால் குறித்த விடயம் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவில்லை.

மேலும் கூட்டத்தில், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த வெறுமனே பொலிசார் மற்றும் அதிகாரிகள் மாத்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இல்லை பொதுமக்கள் பொது அமைப்புக்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமகிழ்தன்,

புலிகளை அழித்ததாக கூறும் இலங்கை இராணுவம் மற்றும் பொலிசாரால் ஏன் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லையா எனவும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்தால் சட்டவிரோத மணல் அகழ்வோரால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



No comments: