இந்திய மாநிலம் கர்நாடகாவில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில், 67 பேருக்கு வேறு வேலையை பெற்றுத்தந்த தலைமை செயல் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இயங்கிவரும் நிறுவனம் OkCredit. இந்நிறுவனத்தில் பணிபுரிந்த 70 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால், அவர்களில் 67 பேருக்கு அந்நிறுவனத்தின் CEO ஹர்ஷ் போகர்ணா வேறொரு பணி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
அவரது இந்த செயல் பரவலாக பேசப்பட்டதைத் தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து போகர்ணா வெளியிட்ட பதிவில், "18 மாதங்களுக்கு முன்பு, நாங்கள் அதிகமாக வேலை செய்து கொண்டிருந்தோம். அப்போது மிக வேகமாக பணியமர்த்தலை செய்தோம். அது எங்கள் தவறு. நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொண்டோம்.
ஒரு நிறுவனராக நான் செய்த கடினமான விடயங்களில் இதுவும் ஒன்று. ஆனால், நாங்கள் அதை சரியான வழியில் செய்ய முயற்சித்தோம்.
70 ஊழியர்களில் ஒவ்வொருவருடனும் நாங்கள் உரையாடினோம். அவர்கள் ஏன் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கினோம்.
67 பேர் Notice Period முடிவதற்குள் வேலைக்கு சேர்ந்துவிட்டனர். வேலை கிடைக்காத மூவருக்கு நாங்கள் இரண்டு மாத கூடுதல் சம்பளத்தை வழங்கினோம்" என தெரிவித்தார்.
மேலும் அவர், ஒருவரை பணியமர்த்தும்போது அவரை குடும்பத்தில் ஒருவர் என்று அழைத்தால், அவரை பணியில் இருந்து விடுவிக்கும்போதும் குடும்பமாகவே அவரை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

No comments: