
நாட்டில் உருவான மின்சார தட்டுப்பாட்டைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து சூரிய மின்கல திட்டத்தை (Solar Panel) நாடு முழுவதும் உருவாக்கி உள்ளது.
இதில் சூரிய மின்கல திட்டத்தை பயன்படுத்தும் பாவனையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மேலதிகமாக வரும் மின்சாரத்தை இலங்கை மின்சார சபைக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய, ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 21வரை, அனைத்து சோலார் உற்பத்தியாளர்களையும் துண்டிக்குமாறு இலங்கை அரசாங்கம் கண்டிப்பான உத்தரவை வெளியிட்டுள்ளது...
ஏப்ரல் புத்தாண்டுக் காலத்தில் நாட்டிற்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, மின்சார அமைப்பைப் பாதுகாக்கும் வகையில் இதை மேற்கொள்வதாக இலங்கை மின்சார சபை குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திடீர் அறிவிப்பினால் சூரிய மின்கல திட்டத்தை வாழ்வாதாரமாகவும் வங்கிக் கடன் அடிப்படையில் திட்டத்தை மேற்கொள்பவர்களுக்கும் குறித்த அறிவிப்பானது பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதுடன், அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பினால் பயனாளர்கள் தமது அதிருப்தியினையும் வெளியிட்டுள்ளனர்
No comments: