News Just In

4/02/2025 03:40:00 PM

லிட்ரோ எரிவாயு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

லிட்ரோ எரிவாயு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்


நாட்டில் பல பகுதிகளில் லிட்ரோ எரிவாயு (Litro Gas) சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிட்ரோ விற்பனையாளர்கள் பல வாரங்களாக பல பகுதிகளில் புதிய எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், லாஃப் நிறுவனம் நேற்று முன்தினம் முதல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது.

லாஃப் எரிவாயு விலை உயர்வு காரணமாக தற்போது லிட்ரோ எரிவாயுவை வாங்க நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டியதால் மேற்கண்ட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணயில், இம்முறை லிட்ரோ எரிவாயு விலை உயர்த்தப்படாவிட்டாலும், லாஃப் தனது 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.420 உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: