News Just In

4/06/2025 06:13:00 AM

விடுதலைப்புலிகள் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு!

விடுதலைப்புலிகள் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு



தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் இறுதிவரை போராடி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் நந்திக்கடலோரம் விடுதலைப்புலிகள் தலைவர் தனது இன்னுயிரை ஆகுதியாக்கினார்.

இதன்படி அவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுக்கும் வகையில் “மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்” கட்டமைக்கப்பட்டதாக தமிழீழ மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது.

அவருக்கான வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி சுவிட்சர்லாந்திலும் தமிழர் வாழும் உலகப்பரப்பு எங்கும் எழுச்சியுடன் மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: