News Just In

4/03/2025 01:40:00 PM

AIஐ பயன்படுத்தி பெண்களின் போலி புகைப்படங்களை உருவாக்கியவர் கைது!

AIஐ பயன்படுத்தி பெண்களின் போலி புகைப்படங்களை உருவாக்கியவர் கைது!
 



 AI என்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, இரண்டு பெண்களின் போலி ஆடையின்றிய படங்களை உருவாக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, அனுராதபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படங்கள், இணையத்தில் பரவலாகப் பரப்பப்பட்டதால் குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சந்தேகநபர் அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஏப்ரல் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

No comments: