News Just In

3/26/2025 12:06:00 PM

ஓய்வூதியம் பெறுவோருக்கான டிஜிட்டல் முறையிலான புகையிரத அனுமதிப்பத்திரங்கள் ; SLT-MOBITEL, புகையிரத திணைக்களம் கைகோர்த்த செயற்பாடு!

ஓய்வூதியம் பெறுவோருக்கான டிஜிட்டல் முறையிலான புகையிரத அனுமதிப்பத்திரங்கள் ; SLT-MOBITEL, புகையிரத திணைக்களம் கைகோர்த்த செயற்பாடு


SLT-MOBITEL, இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் ஓய்வூதிய திணைக்களம் ஆகியன இணைந்து, ஓய்வூதியம் பெறுவோருக்கு தமது புகையிரத பயணங்களை இலகுவாக பதிவு செய்து கொள்ளக்கூடிய வகையில், SLT-MOBITEL இன் நவீன வசதிகள் படைத்த mTicketing கட்டமைப்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கான புகையிரத அனுமதிப்பத்திரங்கள் (warrant) செயன்முறையை ஒன்றிணைத்துள்ளன.

ஓய்வூதியம் பெறுவோருக்கான புகையிரத அனுமதிப்பத்திரங்கள் (warrant) டிஜிட்டல் மயப்படுத்தி அறிமுகம் செய்யும் நிகழ்வு அண்மையில் கொழும்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதில் அரச நிறுவனங்கள், இலங்கை புகையிரத திணைக்களம், ஓய்வூதிய திணைக்களம் மற்றும் SLT-MOBITEL ஆகியவற்றின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் புகையிரத சேவைகளை நவீன மயப்படுத்துவதில் முக்கிய முன்னேற்றமாக, தற்போது ஓய்வூதியம் பெறுவோருக்கும் தமது இல்லங்களில் சௌகரியமாக இருந்தவாறே டிஜிட்டல் கட்டமைப்பினூடாக பயணச் சீட்டுகளை சுலபமாக முற்பதிவு செய்து கொள்ளலாம்.

Mobitel பிரதம செயற்பாட்டு அதிகாரி, சுதர்ஷன கீகனகே, புகையிரத திணைக்கள பொது முகாமையாளர், தம்மிக ஜயசுந்தர, SLT குழும தவிசாளர், கலாநிதி. மோதிலால் டி சில்வா, ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர், சமிந்த ஹெட்டியாரச்சி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் கலாநிதி. ஏ.எச்.எம்.எச். அபேரட்ன ஆகியோர் காணப்படுகின்றனர்.

No comments: