News Just In

3/05/2025 07:09:00 AM

தரமிறக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச சபை! கோடீஸ்வரன் ஆதங்கம்!

தரமிறக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச சபை! கோடீஸ்வரன் ஆதங்கம்



ஊழலற்ற ஆட்சியை முன்னெடுக்கும் நோக்கில் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச சபை விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் விசேட குழு ஒன்றை அமைத்து தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் அரசியல்வாதிகளின் நலன்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமிறக்கப்பட்டதாக கோடீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை அங்கீகாரத்துடன் தரமுயர்த்தப்பட்ட பிரதேச செயலகம் எவ்வாறு உப பிரதேச செயலகமாக தரமிறக்கப்பட முடியும்? என கேள்வியெழுப்பியுள்ளார்

No comments: