News Just In

3/30/2025 09:33:00 AM

முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு


முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு



முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், உதவி தொகை பெறுபவர்களின் எண்ணிக்கைணை ஒரு மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த விடயம் குறித்த கலந்துரையாடல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மையில், 2016 முதல் 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை வெகு விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் குறித்த கொடுப்பனவு பெற வேண்டியவர்களில் 2000 பேர் அளவில் இறந்து விட்டதாக அவர் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: