News Just In

3/07/2025 07:29:00 PM

வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு விஜயம் செய்த பௌத்த தேரர்கள்..!

வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு விஜயம் செய்த பௌத்த தேரர்கள்..!


அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம முதல் நயினாதீவு நாகதீப விகாரை வரையில் ஐந்து  நாடுகளின் தேரர்கள் இணைந்து பாதயாத்திரை முன்னெடுத்துள்ளனர்.

இதில் பங்கேற்றுள்ள 50 தேரர்கள் இன்றையதினம்(07) அதிகாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்தனர்.

இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தேரர்களை வரவேற்றார்.

தாய்லாந்து, மியான்மார், லாகோஸ், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேரர்களே இந்தப் பாதயாத்திரையில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: