News Just In

2/05/2025 06:58:00 PM

றமழான் காலத்தில் விசேட விடுமுறை - உள்ளுராட்சி அமைச்சு!

றமழான் காலத்தில் விசேட விடுமுறை - உள்ளுராட்சி அமைச்சு



2025 றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ரமழான் மாதத்திற்கான விசேட விடுமுறை தொடர்பில் விசேட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்களுக்கு குறித்த சுற்றறிக்கையை திணைக்களம் அனுப்பியுள்ளது. 2025 ரமழான் காலத்தில் விசேட விடுமுறை தொடர்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரமழான் மாதம், 2025 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகி 2025 ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி முடிவடைய உள்ளதால் இக் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும் மதவழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தொழுகைகளும் மதவழிபாடுகளும் நாளாந்தம் பின்வரும் நேர அட்டவணைப்படி நிகழும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மு.ப. 03.30 முதல் மு.ப. 06.00 வரை

பி.ப 03.15 முதல் பி.ப 04.15 வரை

பி.ப 06.00 முதல் பி.ப 07.00 வரை

பி.ப 07.30 முதல் பி.ப 10.30 வரை

இக்காலத்தின் போது அவ் உத்தயோகத்தர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும். மேலும், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் விசேட விடுமுறை அங்கீகரிக்கப்படலாம்.

மேலும் ரமழான் பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரச சேவை கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் உத்தயோகத்தர்களுக்கு விழா முற்பணம் வழங்கத் தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: