(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
இன்று அனுஷ்டிக்கப்படும் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டிலும் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஏற்பாட்டிலும் சிறப்பாக நடைபெற்றன
இதற்கமைய போரதீவுப்பற்று வெல்லாவெளிபிரதேச செயலாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக வளவில் 77வது சுதந்திர தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பிரதேச செயலாளர்எஸ். ரங்கநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.பிரேச செயலாளர் ரங்கநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார் .இந்நிகழ்வுகளில் பிரதேச செயலகத்தின் பணியாளர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் சிறார்கள் என பலரும் பெருமளவில் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.
No comments: