News Just In

2/07/2025 10:30:00 AM

35 வருட ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார் சித்தீக் ஆசிரியர் : பிரியாவிடை நிகழ்வும், வித்தியாரம்ப விழாவும்.!

35 வருட ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார் சித்தீக் ஆசிரியர் : பிரியாவிடை நிகழ்வும், வித்தியாரம்ப விழாவும்.



நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலய கணித பாட ஆசிரியராக கடமையாற்றி வந்த எம்.ஏ.எம். சித்தீக் அவர்கள் தனது 35 வருட அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவரது சேவையை பாராட்டி கௌரவித்து வழியனுப்பும் நிகழ்வும், 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழாவும் பாடசாலை அதிபர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

கடந்த 31.01.2025 முதல் ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.ஏ.எம். சித்தீக் அவர்கள் கல்முனை கமு/கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் கணித பாட ஆசிரியராக மட்டுமின்றி பாடசாலையின் கற்பித்தல் செயற்பாட்டோடு மாத்திரமின்றி ஏனைய இணைப்பாடவிதான, நிர்வாக பணிகளிலும் தானாக முன்வந்து தசாப்தம் தாண்டிய பணி செய்தவர். கமு/கமு/அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்து தொடர்ந்து கமு/கமு/ அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்திலும் கடமையாற்றி இறுதியாக கமு/கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.

கணித பாட ஆசிரியராக ஓய்வு வயது வரையும் சேவையாற்றிய இவர் கல்வி அதிகாரிகளினதும், பாடசாலை சமூகத்தினதும், ஊர்மக்களினதும் நன்மதிப்பை வென்றதுடன் இளமையும், துடிப்போடும் சேவையாற்றிக் கொண்டிருந்தார் என்பதுடன் மிக அனுபவம் வாய்ந்த கணினி தட்டச்சுவியலாளராகவும், தகப்பனை இழந்த வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களிற்கு உதவித் தொகை வழங்கும் பணியில் இரு தசாப்தம் கடந்து சேவை செய்து வருபவர். மேலும் சமூக சேவையிலும், மார்க்க விடயங்களிலும் அதீத ஈடுபாடு கொண்டவராக திகழ்கிறார்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா நிகழ்வில் ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியர் எம்.ஏ.எம். சித்தீக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இவருக்கான பிரியாவிடை நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.எச். அலி அக்பர், உதவி அதிபர்களான எம்.எஸ்.றிஸானா, ஏ.பி.என். ஜெஸீல், எம்.எச்.ஐ.இஸ்ஸத், எம்.எச்.எம். ஜிப்ரி, ஏ.எம். பரீட் உட்பட ஆசிரியர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: