News Just In

2/20/2025 06:16:00 AM

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2025/26ம் நிர்வாக ஆண்டுக்கான புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா ஷாரிக் காரியப்பர்

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2025/26ம் நிர்வாக ஆண்டுக்கான புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா ஷாரிக் காரியப்பர் அமோக வாக்குகளால் தெரிவு 


நூருல் ஹுதா உமர்

கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (19) இடம்பெற்ற கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் இடம்பெற்ற 2025/26 ம் ஆண்டுக்கான கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது பெண் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி. ஆரிகா ஷாரிக் காரியப்பர் தெரிவு செய்யப்பட்டார்.

இவர் கிழக்கு மாகாணத்திலேயே பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் சட்டத்தரணியாக வரலாற்றில் இடம் பெறுகிறார் என்பதுடன் மேற்படி தேர்தலில் அவரை எதிர்த்து சிரேஷ்ட சட்டத்தரணிகளான யூ.எம்.நிசார் மற்றும் ஜனாப். ஐ.எல்.எம்.றமீஸ் ஆகியோர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி.ஆரிகா ஷாரிக் காரியப்பர் அவர்கள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் இலங்கை சட்டக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியுமாவர்.

No comments: