News Just In

1/03/2025 04:54:00 PM

சீனாவில் கோவிட் போன்று பரவும் புதிய வைரஸ்: மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்!

சீனாவில் கோவிட் போன்று பரவும் புதிய வைரஸ்: மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்!



சீனாவில் 'Human metapneumovirus'(HMPV) எனப்படும் ஒரு வைரஸ் பரவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சீனாவில்(China) இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம் பரவி வருகிறது.

வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவிலுள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளது.



தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு சீனாவில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த வைரஸ் பரவல் நிலை குறித்து சீன அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை

No comments: