
ஹமாசிடம் பணயக்கைதிகளாக உள்ளவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் பணயக்கைதிகள் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது,அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் நன்றி என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நவம்பரில் ஜனாதிபதி தேர்தலில் நான் பெற்ற வெற்றி காரணமாகவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யுத்த நிறுத்தம் சாத்தியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகைக்கு நான் தெரிவு செய்யப்பட்டமை,எனது அரசாங்கம் சமாதானத்தை ஏற்படுத்தவும்,அமெரிக்கர்களினதும் அதன் சகாக்களினதும்,பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்தவும் முயலும் என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது எனஅவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இஸ்ரேலிய பணயக்கைதிகள் வீடு திரும்புவார்கள் என்பது குறித்து பெரும் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்
No comments: