News Just In

1/02/2025 07:29:00 PM

30,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதிக்கான டெண்டர் 03ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது!

30,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதிக்கான டெண்டர் 03ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது


இலங்கை அரச வர்த்தக (இதர) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் (STC) ஊடாக 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 2 கட்டங்களாக உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக 20,000 மெட்ரிக் டன்களும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 10,000 மெட்ரிக் டன்களும் இறக்குமதி செய்யப்படும்.

அதன்படி, முதற்கட்டமாக 20,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வெள்ளிக்கிழமை (3) நடைபெறவுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உப்பை கைத்தொழில் அமைச்சின் கீழ் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்படும் உப்பு தொழிற்சாலைகளின் தேவைக்கே பயன்படுத்தப்படுவதாகவும், சாதாரண மக்களின் பாவனைக்கு வழங்கப்படுவதில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: