News Just In

12/17/2024 05:30:00 PM

எமது மேய்ச்சல்தரைகள் தொடர்பான பிரச்சனைகளை இவ் அரசாங்கம் தீர்க்குமா..!

எமது மேய்ச்சல்தரைகள் தொடர்பான பிரச்சனைகளை இவ் அரசாங்கம் தீர்க்குமா..!




இன்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதிலின் போது. வடகிழக்கில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் மேய்ச்சல் தரைகளை வர்த்தமானி மூலம் மேய்ச்சல் தரைகளாக பிரகடனம் செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது, இது கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் மூவாயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்தை வர்த்தமானிப்படுத்துவதாக அரசு கூறியிருந்தும் நாங்கள் மயிலத்தமடு பிரதேசத்தில் மாத்திரம் ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை மேய்ச்சல் தரைகளுக்காக கோரியிருந்தோம், எனது முதலாவது கேள்வி என்னவென்றால் இதை வர்த்தமானிப்படுத்துவது தொடர்பாக கடந்த அரசாங்கம் இடைநிறுத்திய இடத்திலிருந்து தொடர்வதா அல்லது முதலிருந்து ஆரம்பிப்பதா என்பதாகும்?

இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் இதை ஆரம்பத்திலிருந்து செய்யவேண்டியதில்லை, தற்போது மயிலத்தமடு பிரதேசத்தில் மகாவலிக்கு சொந்தமான 1300 ஏக்கர் நிலங்கள் மேய்ச்சல் தரைகளுக்காக எல்லையிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, அதேபோல் வர்த்தமானிப்படுத்துவதற்கு முதலிலே வன இலாகாவிற்கு சொந்தமான நிலங்களில் சிறு பகுகளை தற்காலிகமாக விவசாயிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

மேலும் மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்ற வாசிகளில் கொல்லப்பட்ட கால்நடைகளுக்கான மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நஷ்டஈடு வழங்குவது தொடர்பாகவும் வினவியிருந்தேன்.

அதற்கு அவர் உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிப்பது தான் எமது நோக்கம், இவ்வாறான பிரச்சனைகள் இலங்கையில் பல இடங்களிலும் நிலவுவதாகவும் வெகு விரைவில் இதை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தார்


No comments: