இலங்கை அரசியலமைப்பு பேரவை குழுவிற்கு சிறீதரன் தெரிவு
இலங்கை அரசியலமைப்பு பேரவைக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தெரிவு நடவடிக்கை இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
அரசியல் யாப்பை தீர்மானிக்கின்ற குறித்த குழுவிற்கு, ஆளும் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காத ஏனைய கட்சிகளில் இருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டியிருந்தது.
இந்தநிலையில், வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிறீதரன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரின் பெயரும், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சுயவிருப்பின் பேரில் அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து, எஞ்சியிருந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 11 வாக்குகளைப் பெற்று சிவஞானம் சிறீதரன் குறித்த குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கு 10 வாக்குகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
12/06/2024 07:41:00 PM
இலங்கை அரசியலமைப்பு பேரவை குழுவிற்கு சிறீதரன் தெரிவு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: