News Just In

12/09/2024 05:47:00 PM

விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு

விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு




ஆலடி பளை ஏ9 வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி விஷமிகள் மடப்பள்ளி கூரை வழியாக ஆலயத்தினுள்ளே இறங்கி ஆலயக் கதவினை கொத்தி தீ வைத்து எரித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஒழுங்கீனமாக செயற்படும் விஷமிகளுக்கு எதிராக பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் ஆலயத்துக்கு சென்று பார்வையிட்டதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலயத்தின் கதவினை எரித்த விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கடந்த ஆனி மாதம் இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தது.


No comments: