News Just In

11/07/2024 05:43:00 PM

கிளப் வசந்த படுகொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு !


கிளப் வசந்த படுகொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு !



கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 20 சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (7) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் கடுவலை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளப் வசந்தவின் கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு ஏற்கனமே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 சந்தேக நபர்களும், நீதிமன்ற உத்தரவின் கீழ் 03 மாத காலம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 05 சந்தேக நபர்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: