News Just In

11/04/2024 07:24:00 AM

புலம்பெயர் ஈழத்தமிழரை இலக்குவைத்து புலனாய்வாளர்களின் நகர்வு!


புலம்பெயர் ஈழத்தமிழரை இலக்குவைத்து புலனாய்வாளர்களின் நகர்வு


இந்தியாவில் உள்ள புலனாய்வாளர்களின் அறிக்கைகளை மையமாகக்கொண்டு வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழரை நகர்த்தும் நடவடிக்கையில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டு வருவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.

அதாவது புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் நாடுகளில் ஆட்சியில் இருப்பவர்களிடம் தமிழர்கள் நெருங்காமல் பார்த்துக்கொள்ள பல இரகசிய நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் நாடுகள் இந்தியாவினை கடந்து இலங்கையில் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்வதினை விரும்பாது இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே ஈழத்தமிழர்களை வைத்து புலம்பெயர்ந்தோரை தடுக்கும் நடவடிக்கையில் இந்தியா இரகசியமாக முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

No comments: