சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்கள் அதிக அவதானம் இருக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், அறிவுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் நிலைகள், குளங்கள், ஆறுகள் வாவிகள் என்பனவற்றுக்கு அருகில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பெரிய நீர் நிலைகளான உன்னிச்சைக் குளம், உறுகாமக் குளம், நவகிரிக் குளம் என்பன நீர் நிரம்பிக் காணப்படுகிறது. இதுபோன்று பல குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. அதன் காரணமாக நீர் நிலைகள் குளங்கள் ஆறுகள் வாவிகள் என்பனவற்றை அண்டி வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாலங்களில் பயணிக்கும் போதும் மிகுந்த அவதானம் தேவை. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதனால் அனைவரும் வெள்ள இடருக்குரிய முன்னாயத்தங்களை மேற்கொண்டு எச்சரிக்கையுடள்ன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்புக்கும் மட்டக்களப்புக்குமிடையிலான ரயில் போக்கு வரத்து தங்கு தடையின்றி இடம்பெற்று வருவதாக ரயில்வேத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் மன்னம்பிட்டி - மாதுறு ஓயா வீதி மூடப்பட்டுள்ளதால் மன்னம்பிட்டிக்கும் பொலொன்னறுவைக்கும் இடையில் விசேட ரயில் சேவை இடம்பெற்று வருகின்றது. அரலஹங்வில பிரதேசத்தில் பாலமொன்று உடைந்து விழுந்ததினால் பொலொன்னறுவை அம்பாறை வீதி போக்குவரத்துச் செய்யமுடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments: