News Just In

11/04/2024 07:11:00 AM

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் செயற்பாட்டு காரியாலயம் சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் செயற்பாட்டு காரியாலயம் சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது.


மாளிகைக்காடு செய்தியாளர்

திகாமடுல்ல மாவட்ட புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னம், மூன்றாம் இலக்க வேட்பாளர் ஏ.எம். ஜெமீல் அவர்களுடைய தேர்தல் செயற்பாட்டு காரியாலயம் இன்று சாய்ந்தமருது கடற்கரை வீதியில் சாய்ந்தமருது மக்களின் முன்னிலையில் சமூக செயற்பாட்டாளர் எம். பைஸர் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்திற்கும், அம்பாறை மாவட்டத்திற்கும், சாய்ந்தமருது மண்ணுக்கும் வேட்பாளர் ஏ.எம். ஜெமீல் செய்த நிறைய சேவைகள் பற்றி நன்றியுடன் நினைவு கூர்ந்த சாய்ந்தமருது பொது மக்கள் தமது ஆதரவை அணி திரண்டு வெளியிட்டதுடன் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னம், மூன்றாம் இலக்க வேட்பாளர் ஏ.எம். ஜெமீல் அவர்களுடைய கரத்தினை பலப்படுத்தி ஜெமீல் அவர்களின் வெற்றிக்காக முழுமையாக களத்தில் இறங்கி தேர்தல் பணி செய்ய முன்வந்துள்ளார்கள்.

இந்த தேர்தல் செயற்பாட்டு காரியாலய திறப்பு விழாவில் ஸ்ரீ லங்கா ஜனநாயக கட்சியின் தலைவரும், தேசியப்பட்டியல் வேட்பாளருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபா, அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் நூருல் ஹுதா உமர், காரைதீவு பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஜெயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்

No comments: