News Just In

11/27/2024 11:35:00 AM

கன மழையால் மூதூரில் மக்களின் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கன மழையால் மூதூரில் மக்களின் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு



சீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெய்துவரும் கனமழை காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு,மல்லிகைத்தீவு,பச்சநூர்,சம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

மூதூர் -கட்டைபறிச்சான் இறால் பாலத்தை மேவி நான்காவது வெள்ளநீர் பாய்ந்து செல்கிறது.இதனால் இவ் வீதியூடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிப்பதை எம்மால் காணக் கூடியதாக உள்ளது.

அத்தோடு மூதூர் -அறபாநகர், பாலநகர் கிராமங்களிலுள்ள ச வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்பகுந்துள்ளது.அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு மக்கள் பயன்படுத்துகின்ற பல வீதிகளில் வெள்ளநீர் செல்வதையும் காணமுடிகிறது.

No comments: