News Just In

11/02/2024 05:38:00 AM

காயமடைந்தவரை கொழும்பிற்கு கொண்டு வரும் முயற்சி தோல்வி!

காயமடைந்தவரை கொழும்பிற்கு கொண்டு வரும் முயற்சி தோல்வி!





பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் நேற்று  (1) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவரை விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

படுகாயமடைந்த பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபரை விமானப்படையின் உலங்கு வானூர்தி ஒன்றில் கொழும்புக்கு அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

எனினும், காயமடைந்த நபரை நோயாளர் காவு வண்டியில் பதுளை கால்பந்து மைதானத்திற்கு கொண்டு வந்த போதும், மோசமான வானிலை காரணமாக அது தோல்வியடைந்தது.

இதனால், காயமடைந்த நபரை மீண்டும் பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது

No comments: