அம்பாறை - அக்கரைப்பற்று வீதியில் விபத்து ; இளைஞன் பலி
அம்பாறை - அக்கரைப்பற்று வீதியில் 15ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எரகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.
செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின்போது மோட்டார் சைக்கிள் செலுத்துநர் படுகாயமடைந்த நிலையில் எரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, கெப் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
11/02/2024 01:53:00 PM
அம்பாறை - அக்கரைப்பற்று வீதியில் விபத்து ; இளைஞன் பலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments: