தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை இனிமேல் தங்கு தடையின்றி நினைவு கூருங்கள்
-ஜனாதிபதி
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சுதந்திரத்திற்காகப் போராடி உயிர் நீத்த உறவுகளைத் தமிழ் மக்கள் இனிமேல் தங்கு தடையின்றி நினைவு கூரலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.நொவெம்பெர் மாத மாவீரர் நினைவு கூரல் தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க “தமிழ் மக்களே” என விழித்து விடுத்துள்ள செய்தியில் இதனைத் தெரிவித்துனள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட நெடிய காலமாக தமது சுதந்திரத்திற்காகப் போராடி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து, வாழ்ந்து வரும் தமிழ் மக்களே.. போரின்போது உயிர் நீத்த உங்களின் பிள்ளைகள், பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களை இம்மாதத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் வணங்கி வந்திருக்கின்றீர்கள்.
இவ்வாண்டு முதல் இந்த நவம்பர் மாதத்தில் உங்களுக்காக உயிர்க்கொடைத் தியாகம் செய்தவர்களை நீங்கள் எந்தவிதமான தடைகளும் இன்றி, நிம்மதியாகவும் மிகவும் பாதுகாப்பானதாகவும் நினைவு கூர முடியும் என்பதுடன், இறந்தவர்களை இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஆலயங்கள் பாடசாலைகள் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்களின்றி மிகவும் அமைதியான முறையில் யாருடைய தொந்தரவுகளுமின்றி, நினைவேந்தல் செய்வதற்கான ஒரு அமைதியான சூழலை இன்று அடைந்துள்ளோம். அப்படியொரு அமைதியான சூழலை இயற்கைதான் உருவாக்கித் தந்துள்ளது என்று நினைக்கின்றேன்.
அனுரகுமார திஷ்சநாயக்க என்று சிங்களத்தில் அவரது பெரை எழுதிய கையொப்பத்துடன் 17.11.2024 திகதியிட்டு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: